சித்தாந்தவாதிகளெல்லாம் கொள்கைப்பிடிப்போட இருப்பாங்க, அதுலயும் ஆர்.எஸ்.எஸ் காரங்களுக்கு கை சுத்தம்.. இப்படி கொஞ்சபேர் சொன்னாங்க!
இவரையும் தெரியும் சர்க்கரை ஆலை சாம்ராஜ்யம். கைசுத்தம். இவங்கதான் அந்த வித்தியாசமான கட்சியை கண்ட்ரோல் பண்றது.
இவரோட கதை எல்லாருக்கும் தெரியும் அதனால விளக்கம் வேணாம், ஒரு ஆள் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க அவருகிட்ட கொஞ்சபணம் கொடுத்தா தெரிஞ்சுபோயிடும், அதிகாரமும் அதமாதிரிதான் அதிகாரம் கிடைக்கிறவரைக்குத்தான் சுத்தம் அப்புறம் சூட்கேஸ்தான். காசு கொடுத்தா விலைபோறவங்க!
என்னோட நண்பனுக்கு இந்த கட்சியை ரெம்ப பிடிக்கும் ஏன்னா கைசுத்தம் நேர்மையான ஆளுங்க, இதெல்லாம் அவங்க ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடி இந்த நிலக்கரி ஊழல், சுரங்க ஊழல், சவப்பெட்டி ஊழல் ஆயுத ஊழல் எல்லாத்துலயும் சிக்குனபின்னாடியும் அவனுக்கு இந்த கட்சிதான் பிடிக்கும் ஏன்னா அவனுக்கு இடஒதுக்கீடு பிடிக்காது, அப்புறம் இந்தியா இந்து ராஷ்டிரமா மாறனுங்குறது. சாதி, மதத்தை தாண்டி வெளியவரமுடியல கயிறு தடுக்குது.