சில பகிர்வுகள்
அண்மையில் ஒரு திருமணத்துக்கு சென்னை
சென்றிருந்தோம் திருமணங்களில்தான் பலநாள்
காணாத உறவுகளைக் காண முடிகிறதுஇப்போதெல்லாம் திரு மண வைபவத்தின் போது அதைக் கொண்டு
நடத்தும் புரோகிதர்கள் லெக்சர் கொடுப்பதைக் காண்கிறேன் இந்தத் திருமணத்திலும் புரோகிதர் திருமணம் பற்றி ஒரு பிரசங்கமே நடத்தி
விட்டார் அதை சிறிது காணொளியில்
காணலாம் என்ன வெல்லாமோ சடங்குகள்
பலவற்றிலும் காம்ப்ரமைஸ் செய்கிறோம் மணப்
பெண்ணின் தலையில் நுகத்தடி வைத்து சில மந்திரங்கள் சொல்லப் படுகின்றன சென்னை போன்ற
பெரு நகரில் நுகத்தடிக்குப் பதில் கட்டிலின் கால் ஒன்று உபயோகிக்கப்பட்டது காசி யாத்திரை முடிந்து மணமக்கள்
வரும்போது மலர்களைப்பரப்பி அதன் மேல் வெல்கம் என்று மலர்களாலேயே அமைத்து அதன் மேல் மண மக்களை நடந்து வரச்ச்செய்தனர் இதை பலமாக எதிர்த்து
புரோகிதர் பிரசங்கம் செய்தார்
**********************
ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போது அங்கு ஒரு மழையாவது பெய்யும் ஆனால் இம்முறை ஒரு
சிறு தூறல் கூட விழவில்லை
***********************.
சென்னையில் சென்றிருந்த நாட்களில் மகனின் புது இல்லத்தைக் காண அவனுடன் சென்றது தவிர
எங்குமே போக வில்லை, முடியவில்லை வயதாவதன் தாக்கம் நன்கு தெரிந்தது
*************************************
புஸ்தகா டிஜிடல் மீடியா மூலம் எனதுமூன்று நூல்களை
மின்னூலாக்கி இருக்கிறேன் சிறு
கதைகளின் தொகுப்பாக ஒரு நூலும் நினைவில் நீ என்னும் பெயரில் ஒரு நாவலும் பல நேரங்களில் எழுதி இருந்த கவிதைகளைத்
தொகுத்து ஒரு நூலாகவும் வெளி இட்டிருக்கிறார்கள் நான் எழுதி இருப்பதை எல்லாம்
சேமிக்க மின்னூல்கள் உதவும் என்றே தோன்றுகிறது புஸ்தகா பத்மநாபனை சந்தித்து
இன்னும் சில படைப்புகளை நூலாக்க வேண்டும் என்றுநினைக்கிறேன் இதற்கு முன் மின்னூலாக செய்த முயற்சிகள் வீணானதற்குப்
பிறகு இப்போது அவை வெளியானதில்
மகிழ்ச்சியே
*********************************
சில சிறு கதை போட்டிகள் பற்றிய அறிவிப்புகள் வந்திருக்கின்றன. போட்டிக்காக எழுத மனம்
வரவில்லை. மேலும் எழுதியவை வருமா வராதா
என்று காத்திருப்பதில் எனக்கு உடன்பாடுஇல்லை நான் எழுதுவதை எழுதியவாறே
வெளியிட்டுக் கொள்ள எனது வலைப் பூ இருக்கும் போது பிற இடங்களுக்கு எழுதி அனுப்பி
அவை வெளிவராமலே போக வாய்ப்புகள் அதிகம்
அதை மாற்ற முடியுமா தெரிய வில்லை. என்னதான் எழுதினாலும் சில எண்ணங்களையும் கருத்துகளையும் எழுத்தில் வராமல் தவிர்க்க முடிவதில்லை
**********************************
சென்னையில் பதிவர் சந்திப்பின் போது நான் ஏதாவதுதலைப்பில் டிஸ்கஸ் செய்ய
விரும்புகிறேனா என்று ஜீவி அவர்கள்
கேட்டார்கள் சந்திப்பதே சொற்ப நேரம் அதில் நான் எதையாவது கூற அதைப் பிறரால் ஏற்க முடியாததர்ம சங்கட நிலை
உருவாவதை தவிர்க்கவே விரும்பினேன் யார்
யார் என்ன பேசுகிறார்கள் என்றுகவனித்துக் கணிப்பதே போதும் என்று நினைக்கிறேன் அவரவர்கள் பற்றிய செய்திகள் ஒன்றோ இரண்டோ
வந்தது மேலும் மேலும் சந்திக்க முடிந்தால் இன்னும் வெளிப்படையாக பகிர முடியலாம்
புஸ்தகா
மூலமும் எழுத்துகளிலும் சந்தித்துக்
கொள்ளலாம் என்று ஜீவி ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார் ஆனால் பலரும்
எழுத்தில் தங்களை வெளிப்படுத்திக்
கொள்வதில்லை என்றே தோன்றுகிறது
********************************
எதை எழுதத் துவங்கினாலும் அதுபற்றி நான் ஏற்கனவே எழுதி இருப்பதே முன் வருகிறது ஆகவே தான் சிற்சில மாற்றங்களுடன் எழுதும் போது
அவை முன்பே படித்ததுபோல் சிலருக்குத் தோன்றுகிறது ஆகவே இனி நான் எழுதி
இருந்தவற்றையே மீள்பதிவுகள் ஆக்கலாம்
என்று தோன்றுகிறது ஒரு சிலர்
படித்திருக்கலாம் ஆனால் இப்போது என் வாசகர் வட்டம்தான் விரிந்து விட்டதே
********************************
இன்னும்
ஒரு சென்னை விசிட் இருக்கிறது மேமாதம் பத்தாம் தேதி என்
மகன்பெரும்பாக்கத்தில் வாங்கி இருக்கும்
மூன்றுபடுக்கையறை கொண்ட வீட்டுக்கு புதுமனை புகு விழா வைத்திருக்கிறான்
டிக்கட்டுகள் கிடைப்பதே சிரமமாய்
இருக்கிறது போதாத குறைக்கு கத்திரிவெயிலின்
உக்கிரமான பகுதி அந்த நாட்கள்
இப்போதெல்லாம் விசித்திரமான எண்ணங்கள் மனதை
அரிக்கிறது எல்லோருடனும் பகிரவும் முடியவில்லை. அவற்றைக் கதையாக்கி என்
ஆதங்கங்களை தீர்த்துக் கொள்ளலாம்
என்றுநினைக்கிறேன்
********************************
இந்த முறை எங்கள் வீட்டு மாமரத்தில் காய்கள் மிகவும் குறைவு
காய்த்தவையையும் பக்கத்து வீடு
புதிதாய் கட்டுவதில் இருக்கும் வேலையாட்கள் மாடியேறி வந்து பறித்துக் கொண்டு
போகிறார்கள்
***************************************
எங்கள் வீட்டு வெற்றிலைக் கொடி பற்றி எழுதி
இருக்கிறேன் அது மாமரத்தைப் பற்றி கொண்டு மேலேறி இருக்கிறது வெற்றிலை கேட்டு வருபவர்கள் அதிகரித்து
விட்டார்கள் வெற்றிலையை சும்மா கொடுக்கக்
கூடாது என்கிறாள் மனைவி. ஒப்புக்காவது ஏதாவது காசு வாங்கிக் கொள்கிறாள் ஆனால்
பூஜைக்கு என்று கேட்பவர்களுக்கு
தாராளமாய்க் கொடுக்கிறாள் இங்கெல்லாம் வெற்றிலை ஒரு இலை ஒரு ரூபாயாம்
*********************************************************************
வருடத்துக்கு ஒரு செடியில் ஒரு பூமட்டுமே மலரும் எங்கள் வீட்டு ஃபுட்பால் லில்லியைப் பற்றி முன்பே பகிர்ந்திருக்கிறே,ன் இந்த ஆண்டும் மலர்ந்து பட்டுப்போகும் செடிகளில் ஒன்றி லிருந்து ஒரு பூ மலருகிறது ஆச்சரியம்தான் மலர்ந்த பூ சுமார் ஒரு வார காலம் இருக்கும் பிறகு செடிய்ம் பட்டுப்போய்விடும் ஆனால் மே மாதம் வந்தால் செடியும்வரும் பூவும் மலரும் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சி சொல்லித்தெரியாதது
********************************
மெழுகுவர்த்தியின் ஒளியில் கடவுள் பிரத்தியட்சமாவதைக் கண்டு மகிழுங்கள்
இனி ஒரு வாரகாலம் வலைப்பக்கம் வர முடியாதுஎன்று நினைக்கிறேன் மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுகிறேன்