என்னடா இந்திய அழகியும் நானும் என்று போட்டிருந்ததேன்னுதானே விழுந்தடித்து ஓடிவந்திங்க [ஆமா இவுக அழகாயிருந்துட்டாலும்]
முதன் முதல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற (வருடம் 1949) ப்ரமிலா (Esther Abraham). இந்த அழகிய பெண்ணுக்கு வயது இப்போது 90.
இவர்தான் முதல் இந்திய அழகியாம் என்ன அழகா இருக்காங்க [என்னைப்போலவே! என்ன அவங்க கருப்பா இருக்காங்க ”அடியே மல்லி கண்ணை விளக்கிப்பார் அது கருப்பு வெள்ளை போட்டோ]
கண்களே காதல் கவிதை சொல்லுதே
கண்ணங்களோ அழகை அள்ளுதே
செவ்வித இதழ் சில்லென்ற புன்னகையைச் சிந்துதே
முன்நெற்றி ரோமங்கள்
மொத்த அழகுக்கும் முகவரியாய் இருக்குதே
இதுயார். இப்ப நீங்கதான் விளக்கிபார்க்கனும் அவங்கதான் இவங்க
என்ன ஒரு வசீகரம் முதுமையிலும் இளமையின் பூரிப்பு
தோல்மட்டுமே சுறுக்கத்தால் புன்னகையோ பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல்.
[இதேபோலத்தான் இன்னும் கொஞ்சகாலம் கழித்து மல்லியும் நல்லாதானிருக்குது கற்பனைசெய்து பார்க்கும்போது என்ன இன்னும் வயதுகூடிப்போய் என்பின்னே மச்சான் ஹையா ஜாலிதான்]
//மெயிலில் வந்தது என்னைகவர்ந்தது//
அப்புறம்
எங்கவீட்டு அன்புச்செல்லம் 7.ஆம் வகுப்பு பாஸாகிவிட்டார்.
அனைத்திலும் நல்ல மார்க். 81 ஃபர்சண்டேஜ் .. நிறையகுழந்தைகள் நல்ல மார்க் எடுத்திருக்காங்க அவர்களுகாகவும்.என் அன்புச்செல்லத்துக்காவும்

//மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க//
அனைவரின் துஆக்களும் பிராத்தனைகளும் என்றென்றும். வேண்டும்
என் செல்லத்துக்கு.
அச்சோ ஒன்னு சொல்லனுமே அவருடைய ஆர்ட்டுக்கு வந்த கருத்துக்களை படிக்கச்சொன்னேன்.ஜெய்லானி எழுதியிருந்த கருத்தை படிக்கும் முன் ஹை சூப்பர் கிரீன் ரோஸ், என்று சொல்லிவிட்டு.
கெலர் க்க்க்க்க்க்கப்பு வொள்ள்ள்ளை ப அ அ அ டம் கெடுத்த்த்து வொரைய்ய்ய்யப் பிழ்கவெம் . என்னமம்மி இந்த அங்கிள் இப்படி எழுதியிருக்காங்க ரொம்ப நல்ல அங்கிள்மம்மி என்றார்.
அல்லாவே அது கலர் கருப்பு வெள்ளை படம் கொடுத்து வரையப் பழகுங்ங்கள் என்று எழுதியிருக்காங்கன்னு சொன்னேன் ஓ அப்படியா வெரி வெரி தேங்ஸ்ன்னு சொல்லுங்கமம்மி. நெக்ஸ்ட் என்னை குட்பாய் யின்னு சொன்ன அத்தனை பேருக்கும் பிஃக்[பெரிய] தேங்ஸ் சொல்லுங்க மம்மின்னாரு. என் செல்லத்துக்கு ஊக்கம் கொடுத்த இன்னும் கொடுக்க இருக்கின்ற அனைவருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி
அன்புடன் மலிக்கா