நன்றி கூகிள்
அரபகத்தின் உணவுகளில் அதிக ஆயிலோ மசாலாக்களோ கிடையாது
அவர்களின்உணவுகள் எல்லாமே நம்மைலிருந்து வித்தியாசமானவைகள்.
நெருப்பில் சுட்டெடுக்கப்பட்ட ரொட்டிகள்
பச்சைக்காய்கறிகள், பச்சை கீரைகள், பழவகைகள்
வேகவைத்த உணவுகள், கொழுப்பில்லாத பதார்த்தங்கள், இயற்கை பொருள்களின் உணவுகள் என்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறார்கள்.
சிக்கன் மட்டனைக்கூட தண்ணீரில் குங்குமப்பூ உப்பு லவங்கம் ஏலக்காய்
பிரிஞ்சி இலை என இவைகளை சேர்த்து அதில் இவைகளை வேக வைத்து முக்கால் பதம் வெந்ததும் அதில் உள்ள சிக்கனையோ மட்டனையோ எடுத்துவிட்டு அந்த தண்ணீரிலே அரிசிபோட்டு வேகவைத்து வெந்ததும் அதன்மேல் இந்த பீஸுகளை வைத்து சிறிது நேரம் தம்மிலிட்டு பின் அதைதான் சாப்பிடுவார்கள்[ அதான் கப்ஸா. மந்தி. அப்புடின்னு நிறைய பேரிருக்கு]
நன்றி கூகிள்
அதன் சைடிஸ் என்ன தெரியுமா வெரும் பச்ச தக்காளி வெங்காயம் ப,மிளகாட் புதினா சேர்த்து கொரகொரப்பாக அரைத்த அந்த சட்னிதான்
என்னா டேஸ்டும். குங்குமப்பூ வாசமும். திகட்டாத உணவு
அதேபோல் ஆயிலில் எதையும் பொரிக்கமாட்டார்கள். எல்லாமே
நெருப்பில் சுட்ட கறிகள்தான் அதிகம் விரும்புவார்கள் அதிலும் மசாலாக்கள் கிடையாது
தயிர். மிளகுதூள். உப்பு. ஸ்பைசியாக.சில்லி சாஸ்
கலருடன் வேண்டும் என்றால் அதில் குங்குமப்பூ
பொடிச்ச சீரகம். ஓமம். பட்டை. பிரிஞ்சிப்பூ. சேர்த்து அரைத்து வைத்திருப்பார்கள் அதில்
கொஞ்சம் சேர்த்து. 2 மணிநேரத்திற்கு முன்பாகவே ஊரவைத்து பின் சுடுவார்கள்.
இது நாங்க பிக்னிக்கில் சுடும்போது எடுத்த கிளிக்.
அதன் சைடிஸ் பச்சை முள்ளங்கிகீரை கேரட் வெள்ளரிக்காய், ஹஸ் இலை. முள்ளங்கி என எல்லாமே பச்சையாக இருக்கும்
அதன்கூட கொண்டக்கடலையை வேகவைத்து அரைத்து அதில் ஆலிவ் ஆயில்ஊற்றி சாப்பிடுவார்கள்
நன்றி கூகிள்
இதனுடன் குப்பூஸ் என்னும் பலவகை நான் ரொட்டிகள் எல்லாமே
எண்ணை இல்லாதது முடிந்தவரை பழங்கள்தான் சாப்பிடுவார்கள்
மூன்றுவேளை உணவுகளில் இயன்றவரை இருவேளை ரொட்டிதான்
மட்டன் சிக்கன்கூட வேகவைதுதுதான்.
தேங்காய்பாலோ ஆயிலோ மசாலாக்களோ புளியோ கிடையாது
புளிக்கு பதிளாக புளிப்புதேவைப்பட்டால்
எழுமிச்சைபழத்தை காயவைத்து அதைத்தான் உபயோகிப்பார்கள்.
எப்புடியிருக்கு வாசனை வருதா
ஆரோக்கியமான இயற்கையான உணவுதானே மனிதனை ஆரோக்கியமாக
வாழவைக்க உதவுகிறது
கொஞ்சம் சாப்பிட்டாலும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டால் ஆரோக்கியமாக வாழலாம்
ஆரோக்கியமென்பது மனிதனுக்கு மிக முக்கியம் நாம் வாழ்ந்து முடியும்வரை.
நமக்கு நாமே பாரமாகவோ
நாம் பிறருக்கு பாரமாகவோ இருக்கக்கூடாது
அதனால் முடிந்தவரை நம் ஆரோக்கியத்தை நாம்தான் காக்கவேண்டும்
ஆரோக்கியத்தின் ஒருபங்கு உணவிலும் இருக்கிறது
ஆதலால் உணவுமுறையை சரியாக பேணிக்கொள்ளுங்கள்.
வாரத்தில் 7 நாட்கள். அதில்
1 .மட்டன்
2 .காய்கறிகள்
3. கடல் உணவுவகைகள்
4 . பருப்பு வகைகள்
5 . காய்கறிகள்.
6. சிக்கன்
7. ரசம் மோர் அப்பளம். இப்படி
வார செட்டியூல்ட் போட்டுக்கொண்டு அதிலும் ஆயில் தேங்காய்பால் புளி மசாலா இவைகளை அளவோடு சேர்த்து. [சிலவைகளை சேர்கவில்லையென்றாலும் பரவாயில்லை] சமைத்து உண்டுவந்தால். ஆரோக்கியம் ஆரோக்கியமாக இருக்கும்.
எட்டிப்பார்க்கும் ரியாஸும்.என்னாடா சுட்டுகிட்டேயிருக்காங்க எப்போ தருவாங்களோ! சரிவா நாமபோய் விளையாடிட்டு வருவோமுன்னு மரூஃப் பிடம் சொல்கிறானோ...
ருஸ்கி//ஏதோ நமக்கு தெரிந்ததை அள்ளிவிட்டுட்டோம் அவுக அவுக சூழ்நிலைகளைபொருத்து ஆரோக்கியத்தை கட்டிக்காத்துக்கொள்ளுங்கள்..
..மொத்தத்தில் ஆரோக்கியம் முக்கியம்.அம்பூட்டுதான்
அன்புடன் மலிக்கா