இயற்றியவர் : ஜெய்லானி டீவீ
பாடியவர் : இதை யார் பாடறாங்களோ அவங்களேதான்
இசை ; இந்த மொக்கைக்கு அதான் குறை
நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம் இருந்தும் குட்டை இருந்தும்
தண்ணீர் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல
நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு

தண்ணீ இல்லாத நிலத்துக்கு ஏரின்னு பேரோ
நான் பாடும் பாட்டுக்கு வெரும் பாட்டு யாரோ
மழை இல்லாத ஊருக்கு வேடந்தாங்கல் பேரோ
நான் பாடும் பாட்டுக்கு எதிர் பாட்டு யாரோ
வெயிலோட நான் ஆடும் வெளையாட்ட பாரு
வெளையான நானும் கருப்பா கருத்து போனதப்பாரு
மழையும் வந்தா குட்டையும் நிரம்பும்
என் ஏரியாக்குள்ளையும் மீனும் வருமே கொஞ்சம் பொறு
நான் ஒரு கொக்கு மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
வீட்டுக்கொரு மரம் நடுகின்ற வேலை
அதை வேண்டாமுன்னு வெறுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை
இந்த நிலை வருமுன்னு அப்போதே தெரிஞ்சிருந்தாலே
அமேசான் காட்டுக்கு நானே பறந்திருப்பேனே
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன
கால் எழுத்தென்ன என் ஒத்தை கால் எழுத்தென்ன சொல்லுங்களேன்
நான் ஒரு கொக்கு, மீன் தின்னும் கொக்கு
ஏரி(யே) புரியவில்ல அதில் உள்ளே தண்ணீர்(ரே) தெரியவில்ல
குளம் இருந்தும் குட்டை இருந்தும்
மீன் எதுவும் இல்ல அத சொன்னா புரிவதில்ல
டிஸ்கி: 1 இந்த பாட்டு.. இது யார் மனதையும் புண் படுத்துவது நோக்கமில்லை டெட் ஆர் லைவ் ((வரலாறு முக்கியமில்லையா அதான் ))
டிஸ்கி :2 பூமி சூடாவதை தடுக்க வீட்டுக்கொரு மரம் வளருங்க .வருங்கால தலைமுறைக்கு நல்லது..((இப்படி செய்யாட்டி நான் இன்னும் இது மாதிரி நிறைய மொக்கை பாட்டா போடுவேன் ))