இங்கே நான் இருக்கிற இடத்துக்கு கொஞ்ச தூரத்துல ஒரு பில்டிங் இருக்கு . கீழே கடைகள் மற்றும் மேலே இரெண்டு ஸ்டோரி பில்டிங்.... மெயின் ஏரியாவில காலியா ரொம்ப நாளா இருப்பதை பார்த்துட்டு அக்கம் பக்கம் கேட்டதுல.. அங்கே யார் போனாலும் அடுத்த நாளே அந்த இடத்தை விட்டு ஓடிடறாங்களாம் .
இன்னும் விலாவாரியா விசாரிச்சதுல அதுல பேய் ஒன்னு இருந்துகிட்டு யாரையும் தங்க விடறதில்லை அப்படின்னு சொன்னாங்க .சரி அதுல ஒரு கதை (ஙே ) இது . ஒரு மந்திரம் தெரிஞ்ச ஆள் உள்ளே வந்தாரு நான் இருக்கேன் என்ன சொல்றீங்கன்னு கேட்டதுக்கு பத்தாயிரம் திர்ஹம்ஸ் (( ஊருக்கு ரூ ஒரு லட்சத்து பதிமூணாயிரம் )) தரேன்னு பில்டிங்க் ஓனர் சொல்லி இருக்காரு .
மந்திரம் தெரிஞ்ச ஆள் காலையிலேயே வந்து மந்திரம் ஓத ஆரம்பிச்சிடாரு.. இரவு வரை இது தொடர்ந்து இருக்கு அரபியும் மூனு வேலைக்கும் வந்து சாப்பாடு பார்ஸல் குடுத்துட்டு பார்த்துட்டு போனாரு . மறு நாள் காலையில வந்து பார்க்கும் போது நம்ம மந்திர வாதியை காணல..தேடிப்பார்க்கும் போது மொட்டை மாடியில தண்ணீத்தொட்டி வைக்கும் இட்த்தில தூங்கிகிட்டு இருந்தாரு . அவர் பேரை சொல்லி தேடிய போதுதான் அவருக்கே விழிப்பு வந்திருக்கு ((காலை ஐந்தரை மணி )).
அப்புறமென்ன கீழே வர அங்கே படிக்கட்டு எதுவும் இல்லாத இடத்தில எப்படி இறங்கி வருவாரு..வேறு வழி இல்லாம ஃபயர் சர்வீஸுக்கு போன் செய்து கிரேன் கொண்டு வந்துதான் இறக்கி விட்டாங்க . தரையில கால் பட்டதோ இல்லை அடுத்த வினாடியே ஆள் தலை தெறிக்க ஓடிட்டாரு .யாருடைய கேள்வி பதிலையும் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை .அதுல இருந்த பேய் தூங்கும் போது அவரை மெதுவா மேலே கொண்டு போய் வைத்து விட்டது.
நான் மெதுவா அந்த அரபியை கேட்டேன் . நான் வேனா அங்கேயே இருக்கேன் .அதிகமில்லை ஜெண்டில் மேன் அந்த பில்டிங்கில ஒரு பிளாட் என் பேருக்கே குடுத்திடு .நானே இருந்துக்கிரேன்.. ஒரு மாசம் பார் . நான் இருப்பதை பார்த்துட்டு அப்புறம் எல்லாருமே அங்கே வருவாங்கன்னு சொன்னேன் . உனக்கும் பிசினஸ் ஆச்சி லாபம்தானேன்னு சொன்னேன் .பயபுள்ளை இல்லன்னு சொல்லிட்டான் வேனா மூனு வருஷம் ஃபிரியா இருன்னு சொல்றான் . ஒரு பிளாட் ஃபிரியா குடுக்க ஆசை இல்லை மொத்த பில்டிங்கும் காலியா ரெண்டு வருஷமா இருக்கேன்னு மரமண்டுக்கு புரியல ..
உருவம் உள்ள மனுஷங்களே என்னை பார்த்து பயப்படும் போது , உருவம் இல்லாத பேய் என்னை பார்த்து பயப்படாதா...என்ன ? இதை அந்த அரபிக்கு யாராவது எடுத்து சொல்லுங்களேன்...!! ஜெய்லானி டிவி ஸ்டேஷனை இடம் மாத்தலாமுன்னு பார்த்தா சரி வரலையே . இங்கே இருக்கும் பதிவர்கள் இது மாதிரி இடம் இருந்தால் தெரிவிக்கலாம் தனி கமிஷன் தரப்படும் ஹி..ஹி...J)