![]() |
இந்த நிலைக்கு இந்தியா தள்ளப்படுமா? |
அய்யா மத்திய அரசே, உங்களுக்கு கஜானா காலி ஆனாலும், நாட்டுல பண வீக்கம் ரொம்ப வீங்கினாலும், இன்டர்நேசனல் பேங்க் கடன் அதிகமானாலும் நீங்க கையை வைக்கறது எங்க அடி மடியில தானே, ஏன்னா உங்களுக்கு இளப்பம் நாங்கதானே. இவிங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாண்டான்னு எங்க நெத்தியில போஸ்ட்டர் அடிச்சு எப்பவோ ஒட்டிட்டிங்களே. நாட்டை ஆள நீங்க மட்டுமல்ல, யாரு வந்தாலும் எங்கள அடிக்கறாங்கயா, எவ்வளவு தான் நாங்களும் தாங்குவோம்? எங்க புலம்பல், எங்க ஏழ்மை, எங்க குடும்ப பொருளாதார வீக்கம் (ஏன், அரசுக்கு மட்டும் தான் பொருளாதாரம் வீங்குமா?) என எதுவுமே உங்களுக்கு தெரியாது. உங்களுக்கு சுமை தாங்கியே நாங்க தான?
ரொம்ப நல்லா ஆட்சி நடத்தி, எங்க வாழ்வாதாரத்தையும் முன்னேத்தி, நாட்டையும் சர்வதேச அளவுல முன்னேத்த உங்கள நம்பி கொண்டு வந்தோம். ஆனா நீங்க எங்கெல்லாம் ஓட்டை, ஓடிசல் இருக்குன்னு பாத்து அங்க போயி எல்லாத்தையும் காலி பண்ணி சுத்தமா தொடச்சு அவங்களோட பாக்கெட்டை நொப்பிக்கறாங்க(நொப்பிக்கிட்டாங்க). அது மட்டுமில்லாம என்னன்னமோல்லாம் நடக்குது. அட, என்னவேனாலும் நீங்க நடத்துங்க. ஆனா எங்களை ஏன் கஷ்டப்படுத்துறிங்க? நாங்க சம்பாதிக்கிற பணத்துக்கும் வரி காட்டுறோம். அதுல நாட்டை ஆள பணம் பத்தலையா? ஏன் பத்தலை? பல முதலைங்க வரி கட்டாம ஏப்பம் விடறாங்க. வெள்ளைப் பணத்தை கருப்பாக்கி உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில பதுக்குறாங்க. அட, அந்த கறுப்பை பதுக்க நம்ம நாடு கூட அவங்களுக்கு லாயக்கு இல்ல போல... சரி, இதெல்லாம் காலங்காலமா நடந்துட்டு வருது.
இப்ப நமக்கு என்ன முக்கியம்? விலை வாசி கையை கடிக்க கூடாது. கொஞ்சமாச்சும் நம்ம வருமானத்துல சேமிக்கணும்னு ஆசை வரும். ஆனா நாளைக்கு எதுல விலை கூடப் போகுது? நாளான்னைக்கு எதுல கூடப்போகுதுன்னு தெரியாதுல. அதனால சேமிக்கிற ஆசையும் வேணாம் நமக்கு. பஸ் டிக்கட் ரேட் கூடுனதுல ஒரு லாபம் இருந்துச்சு. அதாவது ரெண்டு பேரு சேர்ந்து பைக்ல போனா கொஞ்சம் காசு மிச்சமாகும். நேரமும் மிச்சமாகும்னு இருந்துச்சு. ஆனா எப்போ பெட்ரோல் உரிமை அரசுக்கிட்ட இருந்து அந்த நிறுவனங்களுக்கு போச்சோ? அப்பவே பைக்ல சேர்ந்து போகறதுக்கும் ஆப்பு வச்சுட்டாங்கயா. ஆமா, அரசு கிட்ட பவர் இருக்குறப்போ வருசத்துல ரெண்டு மூணு வாட்டி பெட்ரோல், டீசல் விலையேத்துவாங்க. அதுவே நம்ம வருமானத்தை மீறி செலவுல வீங்கும்.
![]() |
இந்தப் படத்துல உள்ள டீடெயில்ல பார்த்து மலைச்சு போயிராதிங்க? |
ஆனா, இந்த நிறுவனத்துக்கு பவர் எப்போ போச்சோ? அப்பவே போச்சுங்க நம்ம நிம்மதி. எங்கேயோ சர்வதேசத்துல ரேட் கூடுதாம். அதனால இங்க செலவு கட்டுபடி ஆகலையாம். அப்படியும் மீறி செலவு பண்னுன்னா பண வீக்க விகிதம் ரொம்பவே வீங்குதாம். அதனால பெட்ரோல் ரேட் ஒரு கணக்கு போட்டு கூட்டுவாங்க. இங்க தாங்க அவங்க ஆட்டம் அடங்காம போக ஆரம்பிச்சுச்சு. அவங்க கையிக்கு பவர் போனதுல இருந்து சுமாரா பதினெட்டு தடவ ரேட் கூடியிருக்கு. அதனால நுகர்வோர் பொருட்களின் விலையும் பதினெட்டு தடவ கூடியிருக்கு(இப்படியும் எடுத்துக்கலாம்ல). ஆனா நம்மளோட வருமானம் மட்டும் கூடாது. ஏன்னா, அது நாம வேலை பாக்குறவங்க கையில இருக்கு. அப்படியும் அவங்க வருசத்துக்கு ஒரு தடவ வருமானத்தை கூட்டும் போதும் இந்த விலையேற்றத்தை கவனத்துல வைப்பாங்களா? ம்ஹும்.... ம்ஹும்....
பால் விலை, ஸ்கூல் பீஸ், பஸ் டிக்கட், நுகர்வோர் சாமான்கள் விலையேற்றம், ஆட்டோ,கார் வாடகை ரேட், நெடுந்தூர பேருந்து ரேட், என இப்படி எல்லாமும் விலையேறி சாமானிய மக்களும் நிம்மதியா குடும்பத்த ஓட்ட முடியால. இந்த ரெண்டு மூணு வருசத்துல எல்லா விலையுமே எவரெஸ்ட் மலை மாதிரி ஏறிப் போச்சு. ஆக, இந்த எவரெஸ்ட் மலையில் நாம தான் ஏறணும்? எத்தன பேரால அந்த மலையில ஏற முடியும்? ஏதாவது குறுக்கு வழியில சம்பாதிப்பவன், கறுப்பு பணத்தை பெருக்குறவன், பெரிய பெரிய பவர் இருக்குறவங்க தாராளமா விலையேற்ற எவரெஸ்ட் மலையில் ஏறலாம். ஆனா சாமானிய மக்களான நாம அதுல கண்டிப்பா ஏறித்தான் ஆகணும். ஆனா முடியாது? அதுக்குள்ள இன்னொரு ரூபத்துல ஏதாவது விலையேற்றம் வந்து நம்மள கீழ தள்ளி விட்டுரும். நாம கீழ விழுந்து அடிப்பட்டு நம்ம ஒடம்பு வீங்கும், அதாவது நம்ம குடும்ப வருமானத்தை மீறி செலவு வீங்கும். இந்த வீக்கத்துக்கு மருந்து போட யாரும் வர மாட்டாங்க. வேணும்ன்னா வீக்கத்தை கிள்ளிப் பாக்க வேணா வருவாங்க. அதுதான் இவங்கள நம்புனதுக்கு நமக்கு கெடச்ச பரிசு.
எல்லா ரேட்டும் ஏறிப்போச்சுங்க, இன்னும் நம்மள எவ்வளவு தான் வீங்க வப்பாங்களோ? ஓட்டு பொட்டு இவங்கள உட்கார வச்சதுக்கு நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்? சரி, விடுங்க ஏதோ பொலம்பிட்டேன் இன்னைக்கு.... (நான் மட்டுமா புலம்பறேன்? இந்தியாவே புலம்புது)