சூலை 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜூலை 26 இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
<< | சூலை 2011 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
31 | ||||||
MMXI |
சூலை 26 கிரிகோரியன் ஆண்டின் 207வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 208வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 158 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 811 - பைசண்டை பேரரசன் முதலாம் நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்டான்.
- 1139 - முதலாம் அபொன்சோ போர்த்துக்கல்லின் முதலாவது மன்னனாக முடிசூடி லெயோன் பேரரசில் இருந்து விடுதலையை அறிவித்தான்.
- 1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது.
- 1803 - உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது.
- 1847 - லைபீரியா ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1848 - மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக வீரபுரன் அப்பு தலைமையில் கிளர்ச்சி வெடித்தது. வீரபுரன் அப்பு கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.
- 1891 - டெஹீட்டி பிரான்சுடன் இணைந்தது.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் உக்ரைனின் லுவிவ் நகரை நாசிகளிடம் இருந்து கைப்பற்றினர். அந்நகரில் இருந்த 160,000 யூதர்களில் 300 பேர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது வி-2 ஏவுகணை பிரித்தானியாவைத் தாக்கியது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போட்ஸ்டாம் என்ற இடத்தில் சோவியத் ஒன்றியம், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிவற்றிற்கிடையில் போட்ஸ்டாம் உடன்பாடு எட்டப்பட்டது.
- 1945 - ஹிரோசிமாவில் போடப்படவிருந்த அணுகுண்டைத் தாங்கியவண்ணம் இண்டியானாபொலிஸ் என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் டினியான் தீவை அடைந்தது.
- 1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங்கள் அகவையுடைய மகன் இரண்டாம் புவாட் மன்னன் ஆக்கப்பட்டான்.
- 1953 - கியூபா பூரட்சி: கியூபாவில் மொன்காடா இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ தலைமையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
- 1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை ஆக்கினார்.
- 1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி கார்லொஸ் அர்மாஸ் கொல்லப்பட்டார்.
- 1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- 1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவப்பட்டது.
- 1963 - மசிடோனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,100 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1965 - மாலைதீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து முழுமையாக விடுதலை பெற்றது.
- 1971 - அப்பல்லோ 15 விண்கலம் ஏவப்பட்டது.
- 1974 - ஏழாண்டுகள் இராணுவ ஆட்சியின் பின்னர் கிரேக்கத்தில் மக்களாட்சி ஏற்பட்டது.
- 1994 - எஸ்தோனியாவில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற அதிபர் பொரிஸ் யெல்ட்சின் முடிவெடுத்தார்.
- 2005 - டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது.
[தொகு] பிறப்புகள்
- 1791 - பிரான்ஸ் மொசார்ட், இசையமைப்பாளர் (இ. 1844)
- 1856 - ஜோர்ஜ் பெர்னாட் ஷா, எழுத்தாளர் (இ. 1950)
- 1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ், பொருளியல் அறிஞர்
- 1933 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (இ. 2008)
- 1939 - ஜோன் ஹவார்ட், ஆஸ்திரேலியாவின் 25வது பிரதமர்
- 1971 - மேரி ஆன் மோகன்ராஜ், எழுத்தாளர்
[தொகு] இறப்புகள்
- 1857 - ஒராசியோ பெட்டாச்சினி, யாழ்ப்பாணம் ஆயர்