1864
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
பத்தாண்டுகள்: | 1830கள் 1840கள் 1850கள் - 1860கள் - 1870கள் 1880கள் 1890கள் |
ஆண்டுகள்: | 1861 1862 1863 - 1864 - 1865 1866 1867 |
1864 மற்றைய நாட்காட்டிகளில் | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1864 MDCCCLXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1895 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2617 |
சீன நாட்காட்டி | 4560-4561 |
எபிரேய நாட்காட்டி | 5623-5624 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1919-1920 1786-1787 4965-4966 |
இரானிய நாட்காட்டி | 1242-1243 |
இசுலாமிய நாட்காட்டி | 1280 – 1281 |
ரூனிக் நாட்காட்டி | 2114
|
1864 (MDCCCLXIV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 1 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பமானது.
- ஏப்ரல் 8 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: லூசியானாவில் மான்ஸ்ஃபீல்ட் என்ற இடத்தில் கூட்டமைப்பு படைகள் கூட்டுப் படைகளை தோற்கடித்தன.
- ஆகஸ்ட் 22 - ஜெனீவாவில் செஞ்சிலுவைச் சங்கம் உருவாக்கப்பட்டது.
- அக்டோபர் 5 – கல்கத்தாவில் நிகழ்ந்த சூறாவளியில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - நெவாடா ஐக்கிய அமெரிக்காவுடன் 36வது மாநிலமாக இணைந்து கொண்டது.
- டிசம்பர் 27 - இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
[தொகு] நாள் அறியப்படாதவை
- ஜனவரி - முதலாவது தொடருந்து இயந்திரம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது.
- பெப்ரவரி 1 - டென்மார்க்-புரூசியா போர் ஆரம்பம்.
- ஏப்ரல் - இலங்கையில் அமைக்கப்பட்ட முதலாவது நீராவிப் படகு கொமெற் (Comet) யாழ்ப்பாண வாவியில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
- இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட 120 தொழிலாளர்கள் அடங்கிய "ஆதிலெட்சுமி" என்ற நீராவிக்கப்பல் கடலில் கவிழ்ந்ததில் ஏழுபேரும் பதினைந்து மாலுமிகள் மட்டுமே உயிர்தப்பினர்.
- இலங்கையில் நிலங்களைப் பதியும் சட்டம் (Land Registration) அறிமுகப்படுத்தப்பட்டது.
- தத்துவ போதினி என்ற தமிழ் மாதிகை வெளிவந்தது.
- ஆறுமுக நாவலர் தமிழ்நாடு சிதம்பரத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையை ஆரம்பித்தார்.
[தொகு] பிறப்புகள்
- ஏப்ரல் 21 - மக்ஸ் வெபர், ஜெர்மனிய சமூகவியலாளர் (இ. 1920)
- செப்டம்பர் 17 - அனகாரிக தர்மபால, பௌத்த துறவி (இ. 1933)