
சுருண்ட அந்த மின் கம்பி (வயர்) தான் அதன் அடையாளம், அடிக்கடி சுருட்டிக் கொள்ளும் அதன் சுருக்கத்தை நீவி விட்டுகொண்டே பேசினால்தான் சிலருக்கு பேசிய நிறைவு கிடைக்கும்... அது கனவாக்கிப்போனது இப்போது. புதிய இணைப்புகளுக்காகவும் மேம்பட்ட சேவைக்கும் என்று மாதம் ஒருமுறை பள்ளம் தோண்டி விழ வைப்பதுடன் விழாக்காலங்களில் எங்கள் சேவை உங்களுக்கு தேவை என அன்பளிப்பு வாங்கியது... அது கனவாக்கிப்போனது இப்போது.

காரணம் புதிய இறக்கையில்லா மின்விசிறி...


காரியம் என்றால் வாரியம் வரை நடக்கும்/செய்யும் ஊழல் தான் அதன் அடையாளம். மத்திய அரசு கொடுக்கும் மாநில மானியங்களை மத்திய அமைச்சர் மாமுல் வெட்டாமல் கொடுக்கனும்... அது கனவாக்கிப்போனது இப்போது. இலவசம் கொடுத்து எங்களை இளித்த வாயர்களாக ஆக்காமல் மாதம் ஒருமுறை மாவட்டம் வாரியாக புதிய வேலைவாய்ப்பை உருவக்குவது... அது கனவாக்கிப்போனது இப்போது.
காரணம் பாழாய்போன, பழசாய்போன, பழகிப்போன அரசியல்.
கம்பியில்லா தொலைபேசியை போல்,
இறக்கையில்லா மின்விசிறியை போல்,
சுருட்ட தெரியாத அரசியல்வாதி,
சுருட்ட தெரியாத அரசியல்வாதி,
கையில் தூசிபடாத அரசியல்வாதி...
அரசியல்வாதியில்லா அரசு... என் கனவு.
2 comments:
கனவுதானே... கண்டுகிட்டே இருங்க இராசா!
பழமை இது பகல் கனவு இல்லப்பு, பளிக்க போகிற கனவு, கலாம் சொன்னது போல் கனவு... இந்திய முதல் குடிமகனின் நேரடி ஆளுமையில்... இந்திய அரசு.
Post a Comment