Showing posts with label Vegan Thursday. Show all posts
Showing posts with label Vegan Thursday. Show all posts
Thursday, 26 June 2014 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கொத்சு - 2/Brinjal Kotsu -2 | Side Dish For Idli ,Dosa & Pongal

தே.பொருட்கள்

பெரிய‌ கத்திரிக்காய் - 1
புளி கரைசல் - 1 1/2 கப்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
கடுகு+உளுத்தம்பருப்பு -   தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவில் அடுப்பில் சுட்டு எடுக்கவும்.


*ஆறியதும் தோலுரித்து புளிகரைசலில் உப்பு சேர்த்து மசித்துக் கொள்ளவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் விட்டுதாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து புளிகரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுக்கவும்.

*சூடான இட்லி தோசையுடன் சாப்பிட செம ருசி..

*இது அரிசி உப்புமாவுக்கும்,பொங்கலுக்கும் பெஸ்ட் காம்பினேஷன்.

பி.கு

*இதில் விரும்பினால் தனியா,காய்ந்த மிளகாய்,கடலைப்பருப்பு இவற்றை வறுத்து பொடி செய்து சேர்க்கலாம்.பொடி சேர்க்காமலேயே நன்றாக இருக்கும்.

This is off to Priya's Vegan Thursday
Thursday, 24 April 2014 | By: Menaga Sathia

பொட்டுக்கடலை குருமா/ Pottukadalai (Fried Gram Dal ) Kurma | Side dish for Idli,Dosa & Chapathi

தே.பொருட்கள்

வெங்காயம் -1
தக்காளி -1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் -1
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த விழுது + சிறிது நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
*இடையிடையே கிளறிவிடவும்.பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் குருமா சீக்கிரம் அடிபிடிக்கும் மற்றும் கெட்டியாகிவிடும்.

*பச்சை வாசனை அடங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு

தேங்காய்த்துறுவல் அதிகம் சேர்த்தாலும் சுவை மாறிவிடும்.

Sending to Priya's Vegan Thursday

Thursday, 27 March 2014 | By: Menaga Sathia

முருங்கைக்காய் கத்திரிக்கா மாங்கா சாம்பார் /Drumstick Brinjal Mango Sambar


*மாங்காயை கடைசியாக தான் சேர்க்கவேண்டும்.முதலிலேயே சேர்த்தால் குழைந்துவிடும்.

*மாங்காயின் புளிப்பிற்கேற்ப புளிகரைசலை சேர்க்கவும்.

*நான் பெரிய கத்திரிக்காய் சேர்த்து செய்துள்ளேன்.சிறிய வயலட் கத்திரிக்காய்  2 சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
துவரம்பருப்பு - 1/3 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நறுக்கிய தக்காளி -1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி -2 டீஸ்பூன்
முருங்கைகாய் -1
கத்திரிக்காய் - 1 சிறியது
மாங்காய் - 1
புளிகரைசல் -1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
வடகம் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முருங்கை+கத்திரிக்காய் இவற்றை நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பருப்பை மஞ்சள்தூள்+சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
*பின்  தக்காளி+உப்பு  சேர்த்து குழைய வதக்கவும்.
*கத்திரிக்காய்+முருங்கை சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*காய் வெந்ததும் சாம்பார் பொடி+புளிகரைசல் செர்த்து மேலும் கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் மாங்காய் துண்டுகள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வேகவைத்த பருப்பினை சேர்த்து மேலும் கொதிக்கவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.




This is off to Priya's Vegan Thursday
print this page
Thursday, 27 February 2014 | By: Menaga Sathia

சாமை இட்லி /Saamai ( Little Millet ) Idli | Millet Recipes | 7 Days Breakfast Menu # 5


தே.பொருட்கள்

சாமை அரிசி -2 கப்
வெள்ளை முழு உளுந்து -1/2 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*அரிசி மற்றும் உளுந்து+வெந்தயம் இவற்றை கழுவி தனித்தனியாக 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து  8 மணிநேரம் புளிக்கவிடவும்.

*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சட்னி அல்லது பொடியுடன் பரிமாறவும்.

பி.கு

இதே போல் சாமை அரிசிக்கு பதில் மற்றசிறுதானியங்களிலும் செய்யலாம்.

This is off to Priya's Vegan Thursday
print this page
Thursday, 6 February 2014 | By: Menaga Sathia

ஹார்ட் ஷேப் முறுக்கு/ Heart Shaped Murukku | Valentine's Day Spl


 இந்த ரெசிபியின் செய்முறை  ரிங் முறுக்கு  செய்வது போல தான் ,நான் வட்டமாக செய்வதற்கு பதில் இதய வடிவில் செய்துள்ளேன்.முறுக்கு அச்சில் ஒற்றை நாழியில் போட்டு நீளமாக பிழிந்து இதய வடிவில் ஷேப் எண்ணெயில் பொரிக்க வேண்டும்.கையால் உருட்டியும் செய்யலாம் ரொம்ப நேரமாகும்.

Recipe Source - Hotpotcooking

தே.பொருட்கள்

அரிசி மாவு -1 கப்
பாசிபருப்பு -1.5 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1 கப்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பாசிப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+ஊறவைத்த பாசிப்பருப்பு+1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*கொதிக்கும் அரிசிமாவை சேர்த்து கிளறி 15 நிமிடம் மூடி வைக்கவும்.
*ஆறியதும் மிளகாய்த்தூள்+எள் சேர்த்து பிசையவும்.
*உருட்டும் போது மாவு உடைந்தால் மேலும் சிறிது வெந்நீர் சேர்த்து பிசையலாம்.
*சிறிய உருண்டை மாவு எடுத்து மெலிதாக கயிறு போல் உருட்டி இதய வடிவில் செய்யவும்.

அல்லது முறுக்கு அச்சில் போட்டு செய்யலாம்.ரொம்ப ஈசி ஆனா பிழியதான் கொஞ்ச கஷ்டமா இருந்தது.

*முறுக்கினை ஈரத்துணியால்  உலராதவாறு மூடி வைக்கவும்.பின் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday
Thursday, 30 January 2014 | By: Menaga Sathia

MTR ஸ்டைல் இட்லி மிளகாய்ப் பொடி /MTR Style Idli Milagai Podi | Idli Podi | Chutney Powder | Side Dish For idli / Dosa


MTR  பிராண்ட்  இட்லி பொடி சாப்பிட்டவங்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரியும். இதில் சிட்ரிக் ஆசிட் புளிப்பு சுவைக்காக சேர்க்கபடுகிறது.விரும்பினால் சேர்க்கலாம்.

Recipes Source : Here

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் - 12
வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
சிட்ரிக் ஆசிட் -1 சிட்டிகை
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

* கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து வெடித்த பின் தனியாக வைக்கவும்.

மேலும் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் மற்றும் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை இவற்றை தனித்தனியாக வறுத்தெடுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் மிளகாய்+உப்பு சேர்த்து பொடிக்கவும்.
 *பின் உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை சேர்த்து பொடித்த பின் தேவைக்கு உப்பு+பெருங்காயத்தூள் சேர்த்து பொடிக்கவும்.
 *கடைசியாக பொரித்த கடுகு+சிட்ரிக் ஆசிட் செர்த்து பல்ஸ் மோடில் (Pulse Mode) பொடிக்கவும்.
*ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
*இதனை சாதத்தில் கலந்து நெய் சேர்த்து சாப்பிட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

This is off to Priya's Vegan Thursday
Thursday, 5 December 2013 | By: Menaga Sathia

ஆஞ்சநேயர் வடை - மிளகு வடை/Anjaneyar Vadai(Milagu Vadai)



தே.பொருட்கள்

வெள்ளை முழு உளுந்து - 1 கப்
மிளகு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*உளுந்தை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து உப்பு+பொடித்த மிளகு +சூடான எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து பிசையவும்.

*ஒரு பிளாஸ்டிக்  கவரில் எண்ணெய் தடவி சிறு உருண்டையை எடுத்து மெலிதாக தட்டி நடுவில் ஒட்டை போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

This is off to Priya's Vegan Thursday  & Gayathri's WTML Event
Thursday, 28 November 2013 | By: Menaga Sathia

வரகரிசி சாதம் /How To Cook Varagarisi Sadham / Kodo Millet Rice | Millet Recipes | Diabetic Recipes


வரகரிசியை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இங்கே பார்க்கவும்.

தே.பொருட்கள்

வரகரிசி - 1 கப்
நீர் - 3 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் நீர்+உப்பு+எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும்.
*தண்ணீர் கொதித்ததும் வரகரிசியை கழுவி சேர்த்து வேகவிடவும்.

*தண்ணிர் வற்றி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கி மூடி போட்டு 15 நிமிடங்கள் வைக்கவும்.
*15 நிமிடங்களுக்கு பிறகு சாதம் உதிரியாக இருக்கும்.

*காரகுழம்பு,சாம்பார் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பி.கு

* இதே போல் சாதத்துக்கு பதில் தினை,சாமை,குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில்  சமைக்கலாம்.1 கப் அரிசிக்கு 3 கப் நீர் சேர்த்து சமைக்க வேண்டும்.

This is off to Priya's Vegan Thursday & Gayathri's WTML Event

01 09 10