Showing posts with label google sketchup. Show all posts
Showing posts with label google sketchup. Show all posts

March 18, 2010

வீட்டைக்கட்டிப்பார்!

வீட்டைக் கட்டிப்பார்! அதுவும் கூகிள் ஸ்கெட்ச் அப் பில் கட்டிப்பார் !சரி நான் இணையத்தில் கட்டிய விர்ச்சுவல் வீட்டை நீங்க சுற்றிப்பாருங்க..

கூகிள் ஸ்கெட்ச் அப் உதவியோடு வீட்டில் நடக்கும் கட்டிடவேலைகளில் எப்படி இருக்கவேண்டும் என்கிற மாடலை கொத்தனாருக்கு விளக்க வரையத் தொடங்கினேன். மிக சாதாரணமான ஒரு அவுட்லைனை முதலில் அவருக்கு காண்பித்த பின்னரும் வீடு மாடல்களை வரைவதில் பொழுது போக்கியதில் கொஞ்சமே கொஞ்சம் முன்னேற்றம் வந்திருக்கிறது. கூகிளில் ஸ்கெட்ச் அப் டிசைனிலும் வீடு கட்டுவதும் கடினம் தான். ஒரு இடத்தை தூக்கினால் வீடே ஸ்டார் மாதிரி நீட்டித்துக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது.


சில டிப்ஸ்களை வாசித்து ஒருவழியாக இதுவரை வளர்ந்திருக்கிறது கூகிளார் வீடு. http://www.esnips.com/displayimage.php?pid=3689309 முதல் தளத்தில் இருக்கும் வீடு பற்றி வரைந்திருக்கிறேன். மேல் வீடு கீழ் வீடுன்னு டீட்டெய்லா வரையல.. சுற்றி வரும் வரும்போது வீட்டின் உள் பகுதியும் தெரியும் படியாக காண்பித்திருக்கிறேன். மேல் வீடு கீழ் வீடு நடுவில் மாட்டிக்கிட்டு மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிவாங்கறதுக்கு ரிலாக்சேஷனாக, ஃபேஸ்புக்கில் மக்கள் விளையாடுவது போல எனக்கு இது பொழுது போக்க உதவுகிறது.


சிறிது நாட்களுக்கு முன் இந்த வீடியோவை என் ஸ்டேட்டஸில் வைத்திருந்தேன் பார்க்காத மக்கள் இதையும் பாருங்கள். மிகச்சிறிய வீடியோ தான்.

April 4, 2009

நானும் ஒரு புத்தகம் போட்டாச்சு

சிறுமுயற்சி புத்தகமாகிறது..
எனக்குப் பிடித்த நிறம் பச்சை. அந்த நிறத்திலேயே அட்டை .


































சும்மாதான் பொழுதுபோகலை.. :)

இது மொக்கை, சும்மா என்ற லேபிளின் கீழ் வரும்.