10 பிப்ரவரி 2025 தொடங்கி 3 மார்ச் 2025 வரையிலுமாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தலைப்பை அறிவித்து குறிப்பிட்ட பக்கத்தில் படங்களை சமர்ப்பிக்கக் கேட்டுக் கொண்டது. புதிதாக எடுத்த படங்களாக இருக்க வேண்டியதில்லை. நாம் ஏற்கனவே எடுத்த படங்களில் பொருத்தமானதை குறிப்பிட்ட தலைப்பு மற்றும் #flickr21challenge என tag செய்து அவர்கள் இதற்கென உருவாக்கியிருக்கும் “21 Day Flickr Birthday Photo Challenge” குழுவில் சேர்ந்து விட வேண்டும்.
பரிசுகளைத் தாண்டி பங்களிப்பு முக்கியம் என்பது நான் மற்றும் நம்மில் பலர் “PIT - தமிழில் புகைப்படக்கலை” தளப் போட்டிகள் காலத்திலிருந்து கடைப்பிடித்து வருவது. அதிலும் ஃப்ளிக்கரின் 21 வருடப் பயணத்தில் 17 வருடங்களாகக் கூடவே பயணித்து வரும் நான் பங்கு பெறாவிட்டால் எப்படி:)?
21 தலைப்புகளில் முதல் இரண்டு வாரங்கள் சமர்ப்பித்த படங்கள் உங்கள் பார்வைக்கு..! இவற்றில் 3 மற்றும் 4_ஆம் நாட்களுக்கு மட்டும் இதற்கென்றே எடுத்த படங்கள். மற்ற படங்களின் கீழ் அவை எடுக்கப்பட்ட வருடத்தைக் குறிப்பிட்டுள்ளேன்.
# நாள் 1: துணிவு
# நாள் 2: புள்ளிகள்
#நாள் 5: கேமரா
மிக அருமை. எல்லா படங்களையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஅனைத்து படங்களும் அழகு. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அருமை. வாழ்த்துகள்
பதிலளிநீக்குஃப்ளிக்கர் 21 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்துகள்.