
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றியுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
image courtesy: TOI
இதுவரை தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒரு நாள் போட்டித் தொடரை வென்றது இல்லை. இன்றைய இளம் படை அபார வெற்றியை ருசித்து சாதனை புரிந்துள்ளது.
இந்த வெற்றி குழுவை ஒருங்கிணைக்கும் விராட் முதல் சுழலில் ஜாலம் காட்டும் குல்தீப், சாஹால், வேகத்தில் அசத்தும் பும்ப்ரா, புவனேஷ், மற்றும் பேட்டிங்கில் அசத்திய தவான், பீல்டிங், கீப்பிங் என அசத்திய பாண்ட்யா, தோணி என அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக விளையாடி பெருமை சேர்த்துள்ளார்கள்...
இந்த தொடரைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிக்கான தர வரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவதாக தென் ஆப்பிரிக்கா உள்ளது.
தொடரில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இந்தியாவின் விராட் ஹோலி (429 ரன்கள் ) முதல் இடத்தில் உள்ளார்.
தொடரில் அதிக விக்கெட் எடுத்த பட்டியலில் குல்தீப் ( 16 விக்கெட் ) எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
வாழ்த்துக்கள் டீம் இந்தியா....
3 கருத்துரைகள்:
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தன் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
nice tips
nattu marunthu kadai
www.nattumarunthu.com
siru tholil www.siruthozhilmunaivor.com
சிறந்த பதிவு,மேலும் இதுபோன்ற பல விளையாட்டு செய்திகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை அறிந்து கொள்ள tamilcricketnews என்னும் இனையதளத்தினை பயன்படுத்தி கொள்ளலாம்.