இன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி விடுகிறது இன்றைய உலகம் இவற்றை மீறி ஒருவன் நேர்மையாக இருப்பது சிக்கலானதாக இருக்கிறது . காரணம் இன்றைய சூழல் என்பதை நாம் அறிவோம் . இப்படிப்பட்ட சூழலில் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு இந்த குமுகத்தை பற்றி சிந்திக்கிறார்கள் எனறால் அவர்களை வணங்கி வரவேற்க வேண்டும் ஆனால் அப்படி எல்லாம் இந்த போலியுலகம் செய்வதில்லை மாறாக அவனை கேவலப்படுத்தவே செய்கிறது .
இன்றைய முறைதவறிய உலகம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க செய்வதில்லை. போராட்டமான உலகத்தில் இருந்து தன்னுடைய வாழ்நாளை ஓட்ட வேண்டி இருகிறது வேண்டிய கல்வி , வேலைவாய்ப்பு பொருளாதார சூழல் இவற்றிற்கு இடையே இந்த சமூகம் கொட்டும் போலித்தனத்திக்கும், திரைப்பட , தொலைகாட்சி , பாலுறவு கட்சி போன்றவற்றின் தாக்கத்தினால் தானாய் அவற்றில் கரைத்துக் கொள்ளுகிறான் அல்லது அவற்றில் இருந்து விலகி இருபவனை கண்டு கொள்வதில்லை அல்லது கேவலப்படுத்துகிறது என்பது உண்மையே . இல்லை என்பவர்கள் வரலாம் சான்று கட்டுகிறேன் .
இப்படிப்பட்ட சூழலில் பலவிதமான உளவியல் ரீதியான போராட்டங்களுக்கு ஆளாகிறான் இதன் தாக்கத்தினால் உணவு பிடிக்காமை அல்லது முறைதவறிய உணவு தூக்கமின்மை அல்லது முறைமீறிய இரவு பகல் என பாராது தூங்குவது என உடலையும் உள்ளத்தையும் கெடுத்துக் கொண்டு தன்னுடைய வாழ்நாளை கடத்துகிறான் . இது போராட்டம் மிகுந்த வாழ்வியலை அடிப்படையாக கொண்டு இயங்கு கிறவர் களின் நடைமுறையாக இருக்கிறது .
இப்படி பட்ட சூழலில் இளசுகள் பலவிதமான போரட்டங்களுக்கு ஆளாகிறார்கள் அவர்களை கண்டு கொள்வதுமில்லை வழிகட்டுவதுமில்லை இந்த சூழலில் இயற்க்கை அவனை பாலுறவிற்கு தூண்டுகிறது இந்த சூழலில் பல இளைஞ்சர்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவாதாக கூறுகிறார்கள் . இதற்க்கு விடிவு ? சுய இன்பம் தவறில்லை நன்மையே என தவறன வழி காட்டும் நல்லவர்களும் உள்ளார்கள் சுய இன்பத்தால் உடலின் சக்தியெல்லாம் வீணாகிவிட்டது பலமிழந்து விட்டேன் உடலே பலமின்மையல் அவதிப்படுயறேன் . கண்கள் குழிவிழுந்து பலவீனப் பட்டுவிட்டேன் என கூறிவருகிறார்கள் .
இளமை நீர்மேல் எழுத்தாம் என்பார்கள் இந்த அகவையில் கல்வியும் பொருள் தேடலும் அதற்க்கு பின்னலான கலவியும் தேவை இதை நிறைவு செய்து கொள்ளாமையால் தவறான பாதைக்கு பயனமாகிரார்கள்
என்ன செய்யலாம் ?
உங்களின் இலக்குகளை தீர்மானியுங்கள் .
தவறான வழிகாட்டலை தீர்கமாக நிராகரியுங்கள்
முறையன எதிர்காலத்தை திட்டமிடுங்கள்
சுய இன்பம் தவறானது என கருத்தில் கொள்ளுங்கள்
இந்த எண்ணம் வரும் போது ஒக (யோகாசனம் )இருக்கை கடைபிடியுங்கள் .
இரவில் தூக்கமின் மையால் பல இளஞ்சர்கள் சுய இன்பம் பழகுவதா தெரிவிக்கின்றானர்
தூக்க மின்மைக்கு காரணங்களை கண்டறிந்து விடை தேடுங்கள் .
தூக்க மின்மைக்கு கனவுகளும் ஏக்கங்களும் காரணகிறது அவற்றை நீக்கி மூச்சு பயிற்சி பழகி நீண்ட உறக்கத்திற்கு வித்திடுக .
சிக்கல் கள் எனின் சிக்கலின் அளவு நீளத்தை நீண்ட பட்டியலிடுக . பின்னர் தியானம் செய்து உறங்க செல்க .
சிக்கல் எனின் அந்த சிக்கலின் தன்மையை முழுமையான பட்டியல் இடுக அதற்கான தீர்வுகள் உண்மையில் பின்னர் கிடைக்கும் என முழு நிறைவோடு உறங்க செல்க .
வாழ்கை உங்களுக்கானது உங்களின் இந்த பட்டறிவு இந்த குமுகத்திற்க்கனது உணர்ந்து வாழுங்கள் .
வாழ்க்கை உங்களுக்கானதே
சித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்
