நடக்கப்பழகுகையில் எங்கிருந்தாவது ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருவாய்
துப்பட்டாவை அல்லது ஆளுயரப்பொம்மையை அல்லது சமையலறையிலிருந்து சல்லிக்கரண்டியை!
இப்போதும் ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருகிறாய்..
அது எப்போதுமே ஒரு கேள்வியாக இருக்கிறது!
பாய்ஸ் ஏன் முடி வச்சிக்க மாட்டறாங்க?
யோசித்து சொல்வதற்குமுன்
பாய்ஸ் ஏன் கம்மல் போடமாட்டாங்க?
சொல்வதற்கு நிறைய இருந்தாலும்
எதை முதலில் சொல்வது...
ஹேய், ஆச்சி, அந்த அங்கிள் பாரு, கேர்ல் மாதிரி முடி வச்சிருக்கார்!!
நேற்றுக்காலையில் உன்னிடம் இழுப்பட்ட கேள்வி இப்படியாக இருந்தது,
"ஆச்சி, உனக்கு பாய் பிடிக்குமா கேர்ல் பிடிக்குமா?"
20 comments:
wat z dis mullai? பாய் அண்ணாச்சிக் கடை பிரியாணிதான், எனச் சொல்வதில் என்ன தயக்கம்? வர வர உங்க மறதி ஜாஸ்தியாகிடுச்சி.
:)
காத்திருக்கின்றேன் இப்படியான தருணங்களுக்காக ...
நைஸாக பதிலையும் சொல்லி தந்துடுங்க
ஹாஜரிடம் தடுமாறாமல் இருக்க ...
பப்பு.. எனக்கு உன்னைப்பிடிக்கும்.:-)).
பப்பு நீங்க நெம்ப கேள்வி கேக்குறீங்க?
:))
//பாய்ஸ் ஏன் முடி வச்சிக்க மாட்டறாங்க?
யோசித்து சொல்வதற்குமுன்
பாய்ஸ் ஏன் கம்மல் போடமாட்டாங்க? //
:-))) பப்பு.. பப்பு!
//இப்போதும் ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருகிறாய்..
அது எப்போதுமே ஒரு கேள்வியாக இருக்கிறது!
//
இவ்வரிகளையும் ரசித்தேன்!
//இப்போதும் ஏதாவதொன்றை இழுத்துக்கொண்டு வருகிறாய்..
அது எப்போதுமே ஒரு கேள்வியாக இருக்கிறது!
//
இவ்வரிகளையும் ரசித்தேன்!
வழிமொழிகிறேன் முல்லை.. :)
:)))
ராப் அக்கோவ்வ்வ் :)))))
உடனடியாக பத்து எதிர்கவிதைகள் பார்சேஏஏஏஏஏல்ல்ல்ல்ல்ல்ல்
:)
ஆச்சி
முன் நவீனக்கவிதை கலக்கல், எல்லாம் ஆம்பூர் பிரியாணி செய்ற வேலை என்னத்தை சொல்ல
இதுக்கெல்லாம் என்ன செய்யாலாம் என்று வழி சொல்வீர்கள் என்று வந்தால்!
என்ன இது?
இப்படி எங்கள கேட்டா எப்படி?
எங்களிடம் கேள்வி எதுக்கு முல்லை.. இருக்கவே இருக்கு.. எழுதுங்கள் இன்னுமொரு கடிதத்தை... கருப்பு வெள்ளை க்கு எழுதினது போல!! :)
கேள்வி கேட்பதற்கே பள்ளி போகிறார்கள். நீங்கதான் ஹோம் ஒர்க்
செய்து வச்சிருக்கணும் முல்லை. இப்படி முழிக்கலாமா:)
கவிதை அழகு, முல்லை.
பப்புவுக்கு வாழ்த்துக்கள்.
சூப்பர் பப்பு.
மிக அருமை பப்பு,முல்லை!
:-))
உரையாடல் கவிதை போட்டி கவிதை என்னாச்சு முல்லை?
நட்புடன் ஜமால் said...
//காத்திருக்கின்றேன் இப்படியான தருணங்களுக்காக ...
நைஸாக பதிலையும் சொல்லி தந்துடுங்க
ஹாஜரிடம் தடுமாறாமல் இருக்க ...//
மிக நெகிழ்வான பின்னூட்டம் ஜமால் மக்கா.
//ஹேய், ஆச்சி, அந்த அங்கிள் பாரு, கேர்ல் மாதிரி முடி வச்சிருக்கார்!! //
என்னைய மாதிரி வழுக்கைஎல்லாம் பார்த்து என்னன்னு சொல்லணும்
:-))
Post a Comment