பின், என்னையும், 'ரஃபா ஸ்மூத்தா பாரு' என்று பார்க்கச் சொல்லுவாள். நானும் வருடி விட்டு
'ஸ்மூத்தா இருக்கே' என்பேன்.
'நான் உங்களுக்கு மட்டும் தான் ஸ்மூத்தா இருப்பேன்மா, வர்ஷினிக்கு ஸ்மூத்தாவே இருக்க மாட்டேன்'
நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)

பப்பு சொன்ன உடனே அவளுக்கு அதை செய்துவிட்டாலோ அல்லது கொடுத்துவிட்டாலோ
என் கால்களை கட்டிக்கொண்டு சொல்வாள்.
'அம்மா, நீங்க குட்'மா' (குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!)
எனக்குள் இருந்த கசடுகள் அந்த நிமிடத்தில் உதிர்ந்து போயின!
அகஆழின் பதிவிலிருக்கும் முரண் பற்றிய கவிதையும் அந்த தருணத்திற்கு நெருக்கமானவையே!

'வெரிகுட் பப்பு, பெட்டை ஈரமா ஆக்கவே இல்ல, நீ ராத்திரி எழுப்பினே இல்ல பாத்ரூம் போறதுக்கு' - என்பேன் காலையில்.
வர்ஷினி?
இதுதான் மில்லியன் டாலர் கொஸ்டின்.
'குட்' என்று சொல்லிவிட்டால் பப்புவுக்குள் துளிர் விட்டிருக்கும் பொறாமை கை வழியே நீளும். கண்கள் வழியே நீரைக் கொட்டும். வர்ஷினி 'பேட்' என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் - தொலைந்தீர்கள். பப்புவுக்குள் இருக்கும் வர்ஷினியின் தோழி வெகுண்டெழுவாள்.
'வர்ஷினியும் உன்னை மாதிரியேதானாம்' என்பது எனது பதிலாக இருந்தது.
'குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது!
21 comments:
\\குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது//
:)
பாப்பின்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. இந்த பாப்பின்ஸும் சூப்பர்
//'குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது! //
ரொம்பவே கவலைக்கிடம் தாங்க :)
//எனக்குள் இருந்த கசடுகள் அந்த நிமிடத்தில் உதிர்ந்து போயின! //
வாவ்! :)
//'குட்' என்று சொல்லிவிட்டால் பப்புவுக்குள் துளிர் விட்டிருக்கும் பொறாமை கை வழியே நீளும். கண்கள் வழியே நீரைக் கொட்டும். வர்ஷினி 'பேட்' என்று சொல்லிவிட்டால் அவ்வளவுதான் - தொலைந்தீர்கள். பப்புவுக்குள் இருக்கும் வர்ஷினியின் தோழி வெகுண்டெழுவாள்.//
பப்புக்குட்டி! உனக்கும் எனக்கும் பர்த்டே மட்டுமில்ல, எல்லாம் ஒரே மாதிரி தான்டா!
chooo chweet
'அம்மா, நீங்க குட்'மா' (குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!)
:)))) நாங்க கருட புராண தண்டனையை சிரமேற்கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறோம்.
அக ஆழின் கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
\\'குட்'டா பேடா சொல்லு 'என்று ஆரம்பித்ததிலிருந்து எனது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது! \\
பப்பு கேள்வி கேட்க ஆரம்பித்ததில் இருந்தே அப்படித்தானே!
முல்லை பப்புவுக்கு சுத்தி போடுப்பா தகப்பன் சாமிக்கு [தாய் சாமிக்கு] கண்ணு படப் போகுது.
நாமெல்லாம் இவ்வளவு ஷ்ரூடா இருந்ததேயில்லைதானே:((
விதவிதமான சுவைகளில் 'பாப்பின்ஸ்' அருமை.
//எனக்குள் இருந்த கசடுகள் அந்த நிமிடத்தில் உதிருந்து போயின//
அம்மாக்கள் கரைந்து போகும் தருணம்.
பாப்பின்ஸ் அருமை. எனக்கும் பிடிக்கும். இந்த பாப்பின்ஸும் அப்படியே:)! பப்புவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
//குட்'டா பேடா சொல்லு//
ஆச்சிக்கு பப்பு ஆப்பு வைக்க ஆரம்பிச்சாச்சு :)
//குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!//
வடை சுடவா??? ஹி..ஹி...
//நீ எப்படி இருந்தாலும் எனக்கு பிடிக்கும் பப்பு! :-)//
அதானே...
நான் அந்த அழகான காலகட்டத்தைக் கடந்து வந்து நாளாகி விட்டது.
நீங்களும்,அமிர்தவர்ஷினி அம்மாவும் இருக்கீங்க போல.அனுபவிங்க.திரும்பக்கிடைக்காதுங்க.சரியா அனுபவிங்க.
ஒரு கள்ளங்கபடமில்லாத உலகத்தில் சஞ்சாரிப்பது எத்தனையோ சுகம்.
ரசித்துக்கொண்டே இருக்கலாம் போல....
சூப்பரப்பூ!!!!!!!!!!!!
:-)
ரத்தின சுருக்கம்.ரத்தினம்!
நல்ல தலைப்பு.
அகஆழ்,நல்ல அறிமுகம்.நன்றி முல்லை.
//குண்டு'மா என்று மாற்றி படிப்பவர்களுக்கு கருடபுராணத்தின் படி எண்ணெய் சட்டிதான்!//
அவ்வளவு வேண்டாம்.. உங்க தயிர் சாதம் போதும்
:))))))))
நீங்க குட் அம்மா தான் பாஸ் :) (மெய்யாலும் குட் தான் பாஸ் குண்டு இல்ல) :))
கடைசி வரிகளில் தெரியுது பாருங்க தாய்மை.
கவலை வேண்டாம் பப்பு சமத்து, சீக்கிரம் புரிஞ்சிக்கிடுவாங்க.
’பாப்பின்ஸ்’ ஒவ்வொன்றும் ’ஜெம்ஸ்’ :-)
வித்தியாசமான சுவைகளில் பாப்பின்ஸ் அருமை.
Post a Comment